எழுத்தின் அளவு: அ+ அ- அ
பருத்தி மீதான இறக்குமதி வரியை முழுவதுமாக ரத்து என்ற முடிவை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரியை விதித்துள்ள நிலையில் அதனை ஈடு செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை முழுவதுமாக ரத்து செய்வதாக கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்தது. செப்டம்பர் 30ம் தேதி வரை இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதனை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்திய ஜவுளி துறையை கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என பலரும் எச்சரித்த நிலையில் அதனை ஈடு செய்யும் நடவடிக்கையாக பருத்திப் பொருட்களுக்கான இறக்குமதி வரி முழுமையான ரத்து என்ற முடிவை வருடம் முழுவதும் நீடித்து மத்திய அரசு இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு இருந்த போதிலும் பருத்தி பொருள்களைக் கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடு செய்ய முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.