சின்னம்மாவின் பிறந்த நட்சத்திர தினத்தையொட்டி கழக நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நட்சத்திர தினத்தையொட்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும், ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கியும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடினர்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்த நட்சத்திர தினத்தை, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். கடலூர் மாவட்டக் கழக நிர்வாகிகள் சார்பில், சுத்துக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வராகி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு நாக சண்டி ஹோமம் நடைபெற்றது. புரட்சித்தாய் சின்னம்மா நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டியும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சின்னம்மா தலைமையில் கழக ஆட்சி அமைய வேண்டியும் நாக சண்டி ஹோமம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வராகி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம். ஆனந்தன் உட்பட கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு, வராகி அம்மனை வழிபட்டனர். பின்னர் அவர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

Night
Day