கோயில் திருவிழாவை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வள்ளிகும்மி ஆட்ட அரங்கேற்று விழா விமரிசையாக நடைபெற்றது. வஞ்சிபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ அம்மன் கலைக்குழு ஆசிரியரால், அப்பகுதி மக்களுக்கு வள்ளி கும்மியாட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்றைய நிகழ்ச்சியில் கும்மியாட்ட பயிற்சி பெற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிராமிய பாடல்களுக்கு ஏற்றவாறு ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் ஆடினர். இதனை வஞ்சிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Night
Day