காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி காசி விசுவநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கோயிலை மறுசீரமைப்பு செய்ய அரசு விடுவித்த நிதி முறையாக பயன்படுத்தப்படாமல் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிப்பதுடன், தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்குமாறும் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

Night
Day