அமைச்சர் சேகர்பாபு-வுடன் அர்ச்சகர்கள் வாக்குவாதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கின் போது அமைச்சர் சேகர்பாபுவுடன் அர்ச்சகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 7ம் தேதி குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்த அமைச்சர் சேகர் பாபு, புனித நீர் கலசத்தை மேலே கொண்டு செல்லும்போது அனைத்து அர்ச்சகர்களையும் ஏற வேண்டாம் என உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அர்ச்சகர்கள், அமைச்சர் சேகர்பாபு-விடம் கை நீட்டி பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று அமைச்சரும் அவர்களை கைநீட்டி பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Night
Day