நகைக் கடையிலிருந்து 32 கிராம் தங்கச்செயின் திருட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நகை கடையிலிருந்து 32 கிராம் தங்க நகையை திருடி சென்ற மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

கடையநல்லூர் பகுதியில் அப்துல்காதர் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் நகை எடுப்பதற்காக மூதாட்டி ஒருவர் வந்துள்ளார். இவர் கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பி,  தங்க செயினுக்கு பதிலாக கவரிங் செயினை வைத்துள்ளார். இதனையடுத்து கடையிலிருந்த 32 கிராம் மதிப்பிலான தங்கநகையை திருடிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில், நீண்ட நேரத்திற்கு பின் தங்கசங்கிலி மாற்றப்பட்டதை உணர்ந்த அப்துல்காதர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மூதாட்டியை தேடி வருகின்றனர்.

Night
Day