FIITJEE பயிற்சி மைய தலைவர் மீது வழக்குப்பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

140 பெற்றோரிடம் இருந்து 4 கோடி ரூபாய்க்‍கு மேல் மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு FIITJEE தனியார் பயிற்சி மைய தலைவர் மற்றும் இயக்குனர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் FIITJEE தனியார் பயிற்சி மையத்தின் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பிட்ஜி தனியார் மையம் பெற்றோர்களிடம் பணத்தை வசூலித்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திடீரென மையத்தை மூடியதால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அதன் பேரில் தமிழ்நாடு மற்றும் கேரளா பிட்ஜி தனியார் பயிற்சி மையத்தின் தலைவர் அங்கூர் ஜெயின் மற்றும் இயக்குனர்கள் மீதும் கீழ்பாக்கம் தனியார் மையக் கிளை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் FIITJEEதனியார் பயிற்சி மையங்கள் சில இடங்களில் திடீரென மூடியதால் சர்ச்சை எழுந்த நிலையில், 140 க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒருங்கிணைந்த பயிற்சி என்ற அடிப்படையில் பெற்றோர்களிடம் லட்சக்கணக்கில் வசூலித்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. டெல்லியில் தனியார் பயிற்சி மைய தலைமையகத்தில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் திடீரென மூடப்பட்டதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் கோயம்பத்தூரில் ஆறு மையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Night
Day