"ப்ளீச்சிங்" பவுடர் இல்லாமல் இது என்ன "பான்ஸ் பவுடரா" என மேயர் பிரியா நக்கலாக அளித்த பதிலால் சர்ச்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறித்த கேள்விக்கு, அப்போ இது என்ன பான்ஸ் பவுடரா என மேயர் பிரியா நக்லாக பதிலளித்து சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பர திமுக முதலமைச்சரின் பிறந்த நாள் கொண்டாட்டமாக சென்னை புளியந்தோப்பில் அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் மேயரிடம், சென்னை மாநகராட்சி முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்துவது கிடையாது என்றும், கோலமாவு தான் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர். அதற்கு இதுதான் சாட்சி என அங்கிருந்த ப்ளீச்சிங் பவுடரை எடுத்து வந்து காட்டி கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா, அப்போ இது என்ன பான்ஸ் பவுடரா என நக்கலாக பதிலளித்தார். இந்த மாதிரி பவுடரை சோதனைக்கு உட்படுத்தி ப்ளீச்சிங் பவுடர் என உறுதிப்படுத்துங்கள் என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். ப்ளீச்சிங் பவுடர் என்று உறுதியானால் என் மீது நடவடிக்கை எடுங்கள் என்றும் செய்தியாளர் கூறினார். தொடர்ந்து கேள்வி கேட்ட செய்தியாளர் எந்த சேனல் என்று மிரட்டும் தொனியில் கேட்டுவிட்டு மேயர் பிரியா அங்கிருந்து வேகமாக புறப்பட்டார்.

பொதுமக்களின் சுகாதாரத்தை பேண வேண்டிய சென்னை மாநகராட்சி, ப்ளீச்சிங் பவுடரில் ஊழல் செய்கிறதா என்ற கேள்வி தான் மக்கள் மனதில் எழுந்துள்ளது. மறுபுறம் சென்னை மாநகராட்சி உண்மையிலேயே ப்ளீச்சிங் பவுடரை தான் கொள்முதல் செய்கிறதா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.

Night
Day