கணவருடன் மாமூல் கேட்டு மிரட்டிய திமுக கவுன்சிலர்... பாதிக்கப்பட்டவர் பரபரப்பு புகார்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் திமுக பெண் கவுன்சிலரும் அவரது கணவரும் மாமூல் கேட்டு மிரட்டியதால் பாதிக்கப்பட்ட நபர் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். சொந்த உழைப்பில் வருவாய் ஈட்டுபவரிடம் மாமூல் கேட்டு திமுக பெண் கவுன்சிலர் நடத்திய அராஜகம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்...

சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் பிரேம்.. இவர், தனது  வீட்டின் எதிரே தள்ளுவண்டி கடையில் கடந்த மூன்று ஆண்டுகளாக உணவகம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் 112-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் எலிசபெத் மற்றும் அவரின் கணவரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக பொருளாளருமான அகஸ்டின் பாபு உள்ளிட்டோர் 25 ஆயிரம் ரூபாய் மாமூல் கேட்டு பிரேமை தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

கொள்ளையடித்து பிடுங்கி பிழைக்கும் திமுகவின் மரபு தவறாமல் செயல்படும் திமுக பெண் கவுன்சிலர் எலிசபெத் மற்றும் அவரது கணவர் அகஸ்டின் பாபு உள்ளிட்டோரின் தொடர் மிரட்டல் காரணமாக 15 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார் பிரேம்.  

பின்னர் கேட்ட பணத்தில் ஒரு பைசா குறைந்தால் கூட வாங்க மாட்டேன் என்று கொடுத்த பணத்தைக் கேட்பது போல் செயல்பட்ட திமுக நிர்வாகி அகஸ்டின் பாபு, 25 ஆயிரம் பணத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்று கூறி பதினைந்தாயிரம் ரூபாயை பிரேமிடமே கொடுத்துள்ளார். தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட  அகஸ்டின் பாபு, பிரேமின் சாதி பெயரைக் கூறி மிகவும் இழிவாக பேசியுள்ளார். மேலும், கடையை காலி செய்து விடுவேன்... கொலை செய்து விடுவேன்.. என்றெல்லாம் மிரட்டலுக்கு மேல் மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் திமுக கவுன்சிலர் எலிசபெத் மற்றும் அவரது கணவர் அகஸ்டின் பாபு ஆகியோர் ஏவி விட்டதையடுத்து சூளைமேடு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள், பிரேமின் கடையை காலி செய்ததோடு கடை நடத்தி வந்த இடத்தில் கட்டிடக் கழிவுகளையும் கொட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் வேதனையடைந்த பிரேம், சென்னை மாநகராட்சியின் 112ஆவது வார்டு திமுக கவுன்சிலர் எலிசபெத் மற்றும் அவரது கணவரும் திமுக நிர்வாகியுமான அகஸ்டின் பாபு ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதே கடையை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 

பட்டியலின மக்களின் பாதுகாவலன் என கூறிக் கொண்டு வரும் விளம்பர திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன என்பதற்கு இந்த சம்பவமும் மேலும் சான்றாக அமைந்துள்ளது. 
 

Night
Day