ஒரே நாளில் 185 சவரன் கொள்ளை... சென்னையை அதிரவைத்த கொள்ளை சம்பவங்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

மாநில தலைநகரான சென்னையில் ஒரே நாளில் 4 வெவ்வேறு இடங்களில் 185 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்து நடந்துள்ள இந்த சம்பவங்கள், விளம்பர திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. மக்களை அதிர வைத்துள்ள இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்..!

வின்னர் படத்தில் திருட வந்த வடிவேலு-வை மற்றொரு திருடன் நீ அந்த பக்கம் போ.. நான் இந்த பக்கம் போறேன் என வழிகாட்டும் கதை தான் தற்போது திமுகவின் கேடுகெட்ட ஆட்சியில் நடந்துக்கொண்டிருக்கிறது. அரசு கஜனாவையும் நாட்டின் கனிமவளங்களங்களயும் மக்கள் வரிப்பணத்தையும் ஆட்சியாளர்கள் மும்முரமாக கொள்ளையடித்துக் கொண்டிருக்க.. மறுபக்கம் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் நிற்கதியாக விடப்பட்ட மக்களின் சேமிப்பு கொள்ளையர்களால் சர்வசாதாரணமாக அபேஸ் செய்யப்பட்டு வருவதுதான் கொடுமை.

இப்படி விளம்பர திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்க, சென்னை ஈ.சி.ஆர் சாலை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐடி ஊழியர் மகேஷ்குமாரின் வீட்டில் இருந்து 60 சவரன் அளவிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கொடுங்கையூரில் துணிக்கடை உரிமையாளரின் மகனை கட்டிப்போட்டு 30  சவரன் தங்க நகைகள் மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்திருக்கிறது கொள்ளை கும்பல். அதுமட்டுமா.. சைதாப்பேட்டையில் நகைக்கடையில் இருந்து 60 சவரன் நகைகள் கொள்ளை... சென்னை அண்ணாநகர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 35 சவரன் தங்க நகை திருட்டு என ஒரே நாளில் சென்னையில்  வெவ்வேறு இடங்களில் 185 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரருக்குள்ளேயே மிக துணிச்சலாக அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது காவல்துறையையும் உளவுத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சரின் ஆட்சி நிர்வாகத்தின் லட்சணத்தையே காட்டுகிறது..

திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் என நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் திமுக ஆட்சியில் போலீசார் மீது குற்றவாளிகளுக்கு துளியும் பயம் இல்லாததே கொள்ளையர்கள் சர்வசாதாரணமாக தங்கள் கைவரிசையை காட்டிச்செல்வதாகவே விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இதை சற்றும்பொருட்படுத்தாத ஃபோட்டோ ஷூட் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படுவதாக அவ்வப்போது வெளியிட்டு வரும் ஷூட்டிங் வீடியோக்கள் மக்களை பெரும் கொதிப்புக்கு ஆளாக்கியுள்ளது.

ஆங்காங்கே தள்ளுவண்டி வியாபாரிகள் முதல் நில அபகரிப்பு வரை திமுகவின் வட்ட செயலாளர் தொடங்கி மேலிடம் வரை அரங்கேறும்  ஆராஜகங்களுக்கு உடந்தையாகவும் பாதுகாப்பு அரணாகவும் இருப்பதை முழுநேர வேலையாக செய்து வரும் போலீசார், அதில் சிறிதேனும் பொதுமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தினால் இதுபோன்ற சம்பவங்கள் குறையும் என்ற விமர்சனங்கள் ஓங்கி ஒலித்து வருகிறது. 

அதிலும் 8 மணி ஆகிவிட்டாலே BREATH ANALYSIER-ஐ தூக்கிக்கொண்டு டாஸ்மாக் கடைகளின் வாசலில் STAND போட்டு நின்றுக்கொண்டு DD கேஸ் எழுதுவதிலேயே போலீசார் தங்களது தனித்திறமையை காட்டி வருவதாகவும் குற்றவாளிகளை பிடிப்பதிலோ, குற்றங்களை தடுப்பதிலோ கோட்டைவிடுவதாகவும் பகிரங்க விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது..!

அதுமட்டுமா.. வார விடுமுறை நாட்களில் ஏதோ.. தீவிரவாதிகளை தேடுவதை போல தெருவுக்கு தெரு பேரிகார்டுகளை போட்டுக்கொண்டு கூட்டமாக நிற்கும் போலீசார், வாகன ஓட்டிகளை குறிவைத்து மஞ்சப்பையை நிரப்புவதில் காட்டும் அக்கறையை மக்களின் பாதுகாப்பில் காட்டாமல் போனதே சென்னை மாநகரிலேயே குற்றங்கள் மலிந்துபோக முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இப்படியான சூழலில் தான் ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்ற தொணியில், ஆட்சியாளர்கள் ஒருபக்கம் போலீசார் மறுபக்கம் என மக்கள் பணத்தை SWIFT போட்டு சுரண்டிக்கொண்டிருக்க.. எந்தவித கெடுபிடியும் இல்லாமல் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது திருட்டு கும்பல்.. 

Night
Day