5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, சென்னை அணி பிளே ஆஃப்க்குள் நுழையுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் சென்னை அணி பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே சேர்த்தது. தொடர்ந்து 142 ரன்களை இலக்காக கொண்டு இறங்கிய சென்னை அணி 18 புள்ளி 2 ஆவது ஓவரிலே 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே ஆஃப்  சுற்றுக்கான வாய்ப்பினை சி.எஸ்.கே தக்க வைத்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Night
Day