யுஸ்வேந்திரா சாஹலை தோளில் தூக்கி வைத்து சுற்றிய சங்கீதா போகத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜாலக் திக்லா ஜா என்ற நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை, மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத், தோளில் தூக்கி சுமந்து சுற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனுஷ்ரி வர்மா, தற்போது நடைபெற்று வரும் ஜாலக் திக்லா ஜா ரியாலிட்டி நடன போட்டியில் கலந்து கொண்டு இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தனது மனைவியின் ஆட்டத்தை காண வந்த யுஸ்வேந்திர சாஹலை, சக போட்டியாளரும், மல்யுத்த வீராங்கனையுமான சங்கீதா போகத் திடீரென தோளில் தூக்கி வைத்து கொண்டு சுற்ற ஆரம்பித்தனர். அப்போது ஐயோ மயக்கம் வருகிறது என சாஹல் அலறிய இந்த வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Night
Day