விளையாட்டு
உலக ரேபிட் செஸ் : வெண்கலப் பதக்கம் வென்ற அர்ஜுன் எரிகைசி, கொனேரு ஹம்பிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து...
உலக ரேபிட் செஸ் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் அர்ஜுன் எரிகை?...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி அடிலெய்டில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களை குவிந்தது. 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம், ஆஸ்திரேலியா 2 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
உலக ரேபிட் செஸ் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் அர்ஜுன் எரிகை?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...