ஜூனியர் உலகக்கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

4வது முறையாக ஜூனியர் கிரிக்கெட் உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது. 15வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஒவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 253 ரன்களை எடுத்தது. 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 174 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், 4வது முறையாக ஜூனியர் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Night
Day