விளையாட்டு
மிகவும் கொடூரமான உடற்கட்டமைப்பு கொண்டவர் என அழைக்கப்பட்டவர் பலி...
உலகின் மிகவும் கொடூரமான உடற்கட்டமைப்பை கொண்டவர் என பரவலாக அழைக்கப்பட்?...
டி.என்.பி.எல். தொடரில் நெல்லை அணிக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 8-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, திருப்பூர் அணி முதலில் விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 190 ரன்கள் என்ற இலக்குடன் நெல்லை அணி பேட்டிங்கை தொடங்கியது. அதில் திருப்பூர் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாத நெல்லை அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகின் மிகவும் கொடூரமான உடற்கட்டமைப்பை கொண்டவர் என பரவலாக அழைக்கப்பட்?...
பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம?...