ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 15வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் 15வது லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து, 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, வெறும் 29.4 ஓவர்கள் முடிவில் 100 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன் மூலம், 201 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

Night
Day