கேலோ இந்தியா: 2வது இடத்துக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு அணி 12 பதக்கங்களை குவித்து 2-வது இடத்துக்கு முன்னேறியது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 19ம் தேதி தொடங்கியது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் வரும் 31ம் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. 7-வது நாளான நேற்று தடகளத்தில் தமிழ்நாடு அணி ஒரே நாளில் 12 பதக்கங்களை குவித்தது. இந்நிலையில், பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 12 தங்கம் உட்பட மொத்தம் 60 பதக்கங்கள் குவித்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Night
Day