சென்னை : கோழிக்கோடு ஹீரோஸ் அணியை வீழ்த்திய டெல்லி டூபான்ஸ் அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நடைபெற்று வரும் பிரைம் வாலிபால் லீக் போட்டியின் சூப்பர் 5 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ் அணியை டெல்லி அணி வீழ்த்தியது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 3வது பிரைம் வாலிபால் லீக் தொடர் கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 5 சுற்று போட்டியில் டெல்லி டூபான்ஸ் அணி கோழிக்கோடு ஹீரோஸ் அணியை 14-16, 15-9, 15-11, 15-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Night
Day