சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு - ஸ்டீவ் ஸ்மித்

எழுத்தின் அளவு: அ+ அ-

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணியை வழிநடத்திய கேப்டன்  ஸ்டீவ் ஸ்மித் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித், இதுவரை 170 போட்டிகளில் 5 ஆயிரத்து 800 ரன்கள் எடுத்துள்ளார். 35 வயதாகும் அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணியை வழி நடத்தினார். இதனிடையே இந்தியா எதிரான அரையிறுதி போட்டியில் அந்த அணி தோல்வியை சந்தித்து. இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து அஸ்திரேலியா அணி வெளியேறியது. இந்த நிலையில் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார். இருப்பினும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். 

Night
Day