கோலியை சந்தித்த ரசிகரை சரமாரியாக தாக்கிய பாதுகாவலர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விராட் கோலி காலில் விழுந்த ரசிகரை, பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் வந்து விராட் கோலியின் காலில் விழுந்தார். விழுந்த ரசிகரை எழுப்பியவாறு விராட் கோலி கட்டியணைத்தார். ஆனால், விராட் கோலியை சந்தித்த பிறகு அந்த ரசிகரை வெளியே அழைத்துச் சென்ற பாதுகாவலர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த ரசிகர் பாதுகாவலர்கள் அடித்த வலியில் தாங்க முடியாமல் கதறி அழும் வீடியோ வெளியாகியுள்ளது. 

varient
Night
Day