கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவின் இளம் வீரரான ரிங்கு சிங்கின் தந்தை கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங், கடந்த ஆண்டு இந்தியா அணிக்காக அறிமுகமாகி சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடி வரும் ரிங்கு சிங், தற்போது சிறந்த அதிரடி ஆட்டக்காரராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில், அவரது தந்தை கான்சந்த் சிங் உத்தரப்பிரேதச மாநிலம் அலிகாரில்கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்து வருவது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Night
Day