ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்கு 4வது தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீசியது. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. சதமடித்த கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 108 ரன்களும், ஷிவம் டூபே 66 ரன்களும் எடுத்தனர். 211 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய லக்னோ அணி கடைசி ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 4வது தோல்வியை பெற்ற சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

varient
Night
Day