விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்சென்னை அடுத்த மீஞ்சூர் அத்திப்பட்டு பக...
ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. விசாப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை டெல்லி அணி பதிவு செய்தது. சென்னை அணி தோல்வியை தழுவினாலும், ஆட்டத்தின் கடைசியில் தோனியின் அதிரடியான ஆட்டத்தை கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்சென்னை அடுத்த மீஞ்சூர் அத்திப்பட்டு பக...
வாங்காத கடனை கட்டக்கோரி நோட்டீஸ்கடன் வாங்காத நபர்களுக்கும் கடனை செலுத்த?...