இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் லக்னோ அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 5 முறை சாம்பியனான மும்பை அணி, இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. மும்பை அணி எஞ்சிய 5 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் அந்த அணியின் பிளே-ஆப் வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விடும் என்றே கூறப்படுகிறது. எனவே வாழ்வா-சாவா? நெருக்கடிக்கு மத்தியில் மும்பை அணி இன்று களம் இறங்குகிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day