ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஜோகோவிச் தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான  செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 6-1, 6-2, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் சின்னரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

varient
Night
Day