விழுப்புரத்தில் கொரோனாவால் இளைஞர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரப்பேரி கிராமத்தை சேர்ந்த 34 வயதான தியாகராஜன் என்பவர் ஹைதராபாத்தில் தங்கி கட்டட வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து விடுமுறை எடுத்து கொண்டு சொந்த ஊருக்கு வந்த அவரது உடல் நிலை மோசமானதால் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தியாகராஜனுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், அங்கு தியாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Night
Day