ரூ.10க்கு சிகிச்சை அளித்த மனிதநேய மருத்துவர் ரெத்தினம்பிள்ளை மறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 67 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு ஏழை மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த மனிதநேய மருத்துவர் ரெத்தினம்பிள்ளை இன்று வயது மூப்பு காரணமாக 96 ஆம் வயதில் தனது இல்லத்தில் உயிரிழந்தார்.

மருத்துவர் ரெத்தினம் பிள்ளை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10 ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்கி வந்துள்ளார். சுமார் 65 ஆயிரம் சுகப்பிரசவங்களை செய்து பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்ற பட்டுக்கோட்டை மனித நேய மருத்துவர் ரெத்தினம்பிள்ளை இன்று பட்டுக்கோட்டையில் அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இவரது உடல் நாளை இவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

varient
Night
Day