கோவில்பட்டி அருகே துணை மின்நிலைய ஆயில் கிடங்கில் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள ஆயில் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி அருகே அய்யனார் ஊத்து பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய  மின் தொடரமைப்பு கழகத்தின் 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது.
காற்றாலை நிறுவனங்கள் மற்றும் சோலார் மின் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம் இந்த துணை மின் நிலையத்தில் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த துணை மின் நிலைய  வளாகத்தில் உள்ள ஆயில் கிடங்கில் திடீரென கரும் புகை ஏற்பட்டு தீ பற்றி மளமளவென எரிந்து வானில் கரும்புகை பரவியது. தகவலறிந்து 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். அதிக அளவில் கரும்புகை வெளியேறியதால் விரைவாக தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாக வீரர்கள் தெரிவித்தனர். 

varient
Night
Day