பாலியல் தொந்தரவு - மருத்துவ மாணவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முதுநிலை மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்பு படிக்கும் மாணவிக்கு முதுநிலை மருத்துவ மாணவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை கண்டித்தும், அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் விசாகா கமிட்டி குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் மாணவரை ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், மேல் நடவடிக்கைக்கு மருத்துவ கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்தார். 

இந்நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் பாலியல் தொல்லை அளித்த மருத்துவ மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day