ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டு கேட்பு கருவி

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி, கிளியனூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக இருவருக்குமான மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தனது வீட்டில் தான் அமரும் இடத்திற்கு அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயர்ந்த ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி ராமதாஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து  ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டது தொடர்பாக ராமதாஸ் சார்பில் கிளியனூர் காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரிடம் கடந்த 17ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் கிளியனூர் போலீசார் தனிப்படை அமைத்து தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் தொடர்ந்து 3 நாட்களாக விசாரணை நடத்தினர். 

இதனிடையே ராமதாஸ் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவியை கிளியனூர் காவல் நிலையத்தில் பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் இன்று ஒப்படைத்துள்ளார். இந்த ஒட்டு கேட்பு கருவியை வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Night
Day