காவலர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

25 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற "லாக்கப் டெத்" விவகாரத்தில் சிறையில் உள்ள காவலர்களுக்கு ஜாமின் வழங்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. வெடிகுண்டு வழக்கு தொடர்பாக, வின்சென்ட் என்பவரை தாளமுத்து நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு வின்சென்ட் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  இந்த வழக்கில்  டி.எஸ்.பி., உள்ளிட்ட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க கோரி டிஎஸ்பி உள்ளிட்ட 4 போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் நீதிபதி பூர்ணிமா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கில் சிறையில் உள்ள காவல்துறையினருக்கு ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Night
Day