பல் மருத்துவமனையில் சிகிக்சை பெற்ற 8 பேர் உயிரிழப்பு விவகாரம் - மருத்துவமனைக்கு பூட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் பல் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. 

தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததாக ஐசிஎம்ஆர் அறிக்கை  வெளியிட்டது. இதுகுறித்து, கடந்த 3 நாட்களுக்கு முன் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மருத்துவமனையை ஆய்வு செய்து விசாரணை நடத்தி, மருத்துவர் அறிவரசனிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்நிலையில் திடீரென போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட சுகாதார இணை இயக்குனர்  மருத்துவமனைக்கு சீல் வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவரின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்பதால் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.

Night
Day