எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று கவுண்டர்களில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. மருந்துகளை வாங்க வருபவர்கள் அமர்வதற்கு முறையான இருக்கைகள் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாததால் வெயிலில் தரையில் அமரும் சூழல் நிலவி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மருந்துகளை கேட்டால் பல மருந்துகள் இல்லை என திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிக்சை அளிக்க பயன்படுத்தப்படும் செபலெக்சின் மாத்திரை இல்லை என கூறி திருப்பி அனுப்பவதாகவும், மருந்துகளை வெளியே வாங்கி கொள்ளும்படி கூறுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.