நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினர்.

கடலூர் மாவட்டம், கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியை அப்புறப்படுத்தக் கோரி பாஜகவின் ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகேந்திரன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். 

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு அதிகாரிகள் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்அடிப்படையில், 5 ஐஎஏஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உத்தரவை அமல்படுத்தாததற்கு மன்னிப்பு கோரினர்.  

Night
Day