வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய்

எழுத்தின் அளவு: அ+ அ-

வேங்கைவயல் விவகாரத்தில், சிபிஐ விசாரணை நடத்தப்பட்டால்தான் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகளே, சிபிஐ விசாரணை கோருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த புரட்சித்தாய் சின்னம்மா, வேங்கைவயல் விசாரணையில் கடந்த 2 ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் சந்தேகம் நிலவியதாகவும், இந்த விவகாரத்தில் யாரையோ பாதுகாப்பதற்காக, குற்றப்பத்திரிகை தாக்கல் நடந்திருக்கும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார். இப்பிரச்சனையில் சிபிஐ விசாரணை கேட்கப்படுவது சரிதான் என்றும், அப்போதுதான் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

Night
Day