எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வரவுள்ள நிலையில், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக வரும் 26ஆம் தேதி தமிழகம் வருகிறார். 26ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, இரவு 8.30 – 9.30 மணிக்கு விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பங்கேற்று, தூத்துக்குடி புதிய விமான முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
இதையடுத்து, இரவு 9.40 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் பிரதமர் இரவு திருச்சியில் தங்குகிறார். பின் 27ஆம் தேதி பகல் 12 மணிக்கு, ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு, பின்னர் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிட உள்ளார். தொடர்ந்து, பகல் 2.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, 28ஆம் தேதி பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.