திமுக எம்.பி.மகன் - தேங்காய் வியாபாரி இடையே மோதல் - வெளியான சிசிடிவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் தேங்காய் வாங்கியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக தேனி திமுக எம்.பி மகன் மீது அளிக்கப்பட்ட புகாரை வியாபாரி வாபஸ் வாங்கிய விவகாரத்தில் எம்.பி மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. 

கே.கே.நகர் லேக்வியூ பகுதியை தேனி தொகுதி திமுக எம்.பி தமிழ்செல்வனின் மகன் நிஷாந்த். இவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த 1 ஆம் தேதி காலை தனது கர்ப்பிணி மனைவியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவில் வாசலில் தேங்காய், பழம் வியாபாரம் செய்யும் சமயமுத்து என்பவருடைய மகன் மணிகண்ட பிரபு என்பவரிடம் இருந்து பழம் வாங்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சமயமுத்துவும் அவரது மகன் மணிகண்டபிரபுவும் தேங்காய்களை நிஷாந்த் மீது வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பாபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சமயமுத்து, நிஷாந்த் கடைக்கு  வந்து தேங்காய் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் மாறி மாறி தேங்காயை வீசி சண்டையிட்டு கொண்டதாக தெரிவித்தார். பொது இடத்தில் இதுபோன்று சண்டை வேண்டாம் என்று சிலர் சொன்னவுடன் நிஷாந்த் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கி விட்டதாக கூறிய சமயமுத்து, எங்கள் வாழ்வாதாரமே எங்கள் கடைதான் என்றும் தங்களை மன்னித்து விடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சமயமுத்துவின் மனைவி சம்பவம் நடைபெற்ற மறுநாளே மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்னரும் 20 நாட்களாக வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறையினர் தாமதப்படுத்தியதற்கான காரணம் அரசியல் அழுத்தமா என்ற பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளது. 


Night
Day