மகளிர் உரிமை தொகை கிடைக்காததால் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தோல்வி பயம் வந்து விட்டதாலும், தேர்தல் நெருங்கி விட்ட காரணத்தினாலும் தற்போது உங்களுடன் ஸ்டாலின் மூகாம் மூலம் மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதாக கூறி விளம்பர திமுக அரசு நாடகமாடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படும் என அளித்த விளம்பர திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிப்படி செயல்படாமல் குறிப்பிட்ட மகளிருக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கி ஏமாற்றியது. இதனால் உரிமை தொகை கிடைக்காத விரக்தியிலிருந்த பெண்கள் ஒன்று கூடி, சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் மண்டல அலுவலகத்தில் குவிந்தனர். அங்கு நிர்வாக அதிகாரியை நேரில் சந்தித்து மனு அளித்த பெண்கள், தங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக ஆதங்கம் தெரிவித்தனர்.

மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்த தங்களது விண்ணப்பங்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய பெண்கள், தற்போது நடைபெறுவதாக சொல்லப்படும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறவில்லை எனவும் குற்றம்சாட்டினர். 

Night
Day