வன்னியர் சங்க மாநாடு - மரக்காணம் ECR வழியே வாகனங்கள் செல்ல காவல்துறை தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள வன்னியர் சங்க மாநாட்டிற்கு மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியே வாகனங்கள் செல்ல தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2013-ல் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் பாமக- விசிக இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதை அடுத்து இம்மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று வரும் 11ம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இந்தநிலையில் மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியே செல்ல தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி, கடலூரில் இருந்து செல்லும் வாகனங்கள் திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும், ஒலிப்பெருக்கி பயன்படுத்த கூடாது, மதுப்பாட்டில், ஆயுதம் எடுத்து செல்லகூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Night
Day