எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம் பெற்ற வீர ராஜ பாடலில், தனது தாத்தா மற்றும் தந்தை பாடிய சிவ ஸ்துதி பாடலின் சில பகுதிகளைப் பயன்படுத்தியதாக கூறி பாடகர் பயாஸ் வாசிபுதீன் தாகர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வீரா ராஜா வீரா பாடல் சிவ ஸ்துதி பாடலைப் போலவே உள்ளது என்றும், பதிப்புரிமை மீறல் தொடர்பாக 2 கோடி ரூபாயை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் ஏ ஆர் ரகுமான், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஏ.ஆர். ரகுமான் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் அஜய் திக்ப்பால் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிநீதிபதியின் முந்தைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.