லோடு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - ஒருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே லோடு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அழகாபுரி என்ற கிராமத்தில்  மனைவியுடன் வசித்து வரும் ஓட்டுநர் முருகையா என்பவர், பெருங்கோட்டுரில் இருக்கும் தனது பெற்றோரை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் கருத்தபாண்டியுடன் அழகாபுரி திரும்பி கொண்டிருந்தார். அப்போது சங்கரன்கோவிலை நோக்கி வந்து கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி விசப்பட்ட முருகையா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த கருத்தபாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் முருகையா சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். 

varient
Night
Day