மெட்ரோ கர்டர் விழுந்த விவகாரம்- 4 பொறியாளர்கள் பணிநீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் வழித்தட பணியின்போது ராட்சத கர்டர் விழுந்து ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் L&T  நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 12ம் தேதி ராட்சத கர்டர் சரிந்து, சாலையில் சென்ற ரமேஷ் என்பவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம்  L&T நிறுவன அதிகாரிகள், பொறியாளர்கள் என 26 பேரிடம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக்கிடம் சமர்ப்பித்தது. இதனையடுத்து, மெட்ரோ ரயில் நிர்வாகம், L&T  நிறுவனத்துக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்ததுடன், இந்த சம்பவத்தில் கவனக் குறைவாக செயல்பட்ட 4 பொறியாளர்களை மெட்ரோ திட்டப் பணிகளில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

Night
Day