முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் ஒரு நாள் நீட்டிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் ஒருநாள் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் அவர், காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு மேலும் ஒரு நாள் காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

varient
Night
Day