மீண்டும் அடுத்த மாதம் தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகத்திற்கு மீண்டும் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, 6 முறை அரசு நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, மீண்டும் அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

varient
Night
Day