தமிழகத்தில் ஏப்.19 ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு - அனைத்து ஐ.டி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவன ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க ஆணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனிடையே தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

varient
Night
Day