மின் கட்டண உயர்வால் ஆபத்தில் பின்னலாடை தொழில் திருப்பூர் தொழிலாளர்கள் வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் பின்னலாடை தொழில் அபாய நிலைக்கு சென்றுள்ள நிலையில், 13 சதவீத மின் கட்டண உயர்வு அந்த தொழிலை முடங்கச் செய்யும் அளவுக்கு இழுத்து சென்றுள்ளது. பின்னலாடை தொழில் மீது விழும் அடி மேல் அடியால் திருப்பூரே கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை காண்போம்.

சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த திருப்பூர் நகரம், இன்று போதிய வேலைகைள் இல்லாமல் களையிழந்து காட்சி அளிக்கிறது.

திருப்பூர் என்றாலே பின்னலாடை நிறுவனங்கள் தான். திருப்பூரில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடை தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனங்கள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. 

இந்த ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்படுகின்றன. ஆண்டிற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

ஆனால் கடந்த சில ஆண்டுளாகவே பின்னாலடை உற்பத்தி மோசமான நிலையை சந்தத்து வருகிறது. இதற்கு பல காரணங்களை அடுக்குகின்றனர் பின்னலாடை உரிமையாளர்கள்.

ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் குளிர்காலங்கள் வரும்போது திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிவது வழக்கம். ஆனால் உக்ரைன் ரஷ்யா போர் காணமாக கடந்த 2 ஆண்டுகளில் அதற்கும் வழியில்லாமல் போனதாக வேதனை தெரிவிக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

சர்வதேச சந்தைகளால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு மேலும் ஒரு இடியை கொடுத்துள்ளது விளம்பர திமுக அரசு. தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணத்தை 13 சதவீதம் வரை உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது திமுக அரசு. கட்டணத்தை திரும்பபெற 8 கட்டங்களாக போராட்டம் நடத்தியும், தங்களின் துயரங்களை துடைக்கவே இல்லை என தெரிவிக்கின்றனர் பின்னாடை நிறுவன உரிமையாளர்கள்.

திருப்பூரில் தற்போது 25 சதவீத நிறுவனங்கள் தான் செயல்பட்டு வருகின்றன. ஆர்டர்கள் வராததால் பல நிறுவனங்கள் தங்கள் பணியாட்களை வேலைநீக்கம் செய்து வருகின்றன. சில நிறுவனங்களோ வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் தமிழக அரசும் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் 10 லட்சம் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குரியாகி உள்ளது.

திருப்பூரையும், பின்னலாடை நிறுவனங்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால், மின் கட்டண உயர்வை ரத்து செய்தும், கொரோனா காலத்தில் செய்த உதவியை போன்றும் தற்போதும் உதவ வேண்டும் என்பதே பின்னலாடை நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளது. 

Night
Day