மாமன்னர் பூலித்தேவரின் 309வது அகவை விழா - சின்னம்மாவிடம் வழங்கப்பட்ட விழா அழைப்பிதழ்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம், மாமன்னர் பூலித்தேவர் 309வது அகவை விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், தென்காசி மாவட்டம் நெற்கட்டான்செவ்வயல், பூலித்தேவர் வாரிசு சார்பில், வெள்ளத்துரை, அஜய் சிவசெல்வம், நந்தகுமார் ஆகியோர், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து, செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவிருக்‍கும் மாமன்னர் பூலித்தேவர் 309வது அகவை விழாவுக்‍கான அழைப்பிதழை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, அனைவரும் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்‍கொண்டனர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், தென்காசி மாவட்டம், நெற்கட்டான்செவ்வயல் பூலித்தேவர் வாரிசு சார்பில் துரை சூர்யபாண்டியன், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து, செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற இருக்கும் மாமன்னர் பூலித்தேவர் 309வது அகவை விழாவுக்‍கான அழைப்பிதழை வழங்கினார். பின்னர், புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Night
Day