எழுத்தின் அளவு: அ+ அ- அ
மயிலாடுதுறை அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட தொகுப்பு வீடு இடிந்து விழுந்து 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தால் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பொய்கைகுடி கிராமத்தில் 15 வீடுகள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், இரும்பு கம்பிகள் கொண்ட பெல்ட் போடாமல் வீடு தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சரண்யா - காமராஜ் தம்பதியின் வீட்டின் பணி முழுமை பெறாத நிலையில், அவர்களது மகள் சஹானா விளையாடி கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் உட்புற சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருமங்கலம் மணல்மேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.