இங்கிலாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 அரசு முறை பயணமாக இங்கிலாந்துக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இங்கிலாந்துக்கு சென்றார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு, லண்டன் வாழ் இந்தியர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதையடுத்து இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசையும் சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக இந்தியா - இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இங்கிலாந்துக்கு 99 சதவீத இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு வரி இருக்காது என கூறப்படுகிறது. 

இதை தொடர்ந்து, இங்கிலாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து அங்கிருந்து மாலத்தீவுக்கு செல்கிறார். 

Night
Day