மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை - பொதுமக்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திண்டுக்கல்-கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலையில் விதிமுறைக்கு புறம்பாக கப்பலூர் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த சுங்கச்சாவடியில் இன்று முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கிடையாது எனவும், 50 சதவீதம் கட்டண கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Night
Day